தட்சிணேசுவரத்தில்
சீடனின் வருகைக்காக குருவின் தவம்
அம்பாள் ராமகிருஷ்ணரிடம் "உன்னிடம் பவதரிணிக்கு பூஜை நடைபெறும்பொதெல்லாம்
உணர்ச்சி பிழம்பாவார் நா தழுதழுக்கும் உள்ளம்
பூரிப்படையும் இங்கும் அங்கும் அவர் மனம் அலை பாயும் நிறைந்துள்ள ஆன்மீக அமுதத்தை
உலக மக்களுக்கு வழங்கிட வல்ல சீடர்கள் உன்னை நாடி வரும் நாள் நெருங்கிவிட்டது"
என அருள் வாக்கினை நல்கிய நாள் முதல் தட்சிணேசுவரத்தில் சர்வேசுவரியான பவதரிணியின் பூஜை முடிவுற்றவுடன் ராமகிர்ஷணரின் மனம் சீடர்களை தேடி அலைப்பாயத் தொடங்கும். சர்வேசுவரி சொன்ன சொல் பொய்யாகுமா அவள் அல்லவா சொன்னாள் உன்னிடம் நிரம்பி வழியும் ஆன்மீக அமுத கலசத்திலுள்ள அமுதத்தை வாரி வாரி வழங்க உன்னை தேடி உன் சீடப்பிள்ளைகள் வருவார்கள் என்று.